

அரசு தொடர்பான தகவல்களை வலைதளங்களில் பதிவிடக்கூடாது.வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பிறப்பித்த உத்தரவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பொதுமக் கள் பிரச்சினைகள், அரசு திட்டங் களை துரிதமாக செயல்படுத்த ஏது வாக அனைத்து அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்த 2 வாட்ஸ்அப் குழுக்களை நடத்தி வந்தார். ‘வள மான புதுச்சேரி’, ‘கிராம மேம்பாடு’ என்ற பெயரில் உள்ள அந்த வாட்ஸ் அப் குழுக்களில் புதுச்சேரியின் முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றிருந் தனர். பிசிஎஸ் அதிகாரியும் கூட்டுறவு சங்கப் பதிவாளருமான சிவக்குமார் ஒரு குழுவில் ஆபாசப்படம் பதிவிட்ட தாக எழுந்த பிரச்சினையை அடுத்து அவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை புதுச்சேரியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பணி யாளர் நலத்துறை மூலம் அனுப்பப் பட்ட சுற்றறிக்கையில், ‘அரசு சார் புடைய வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும்’ என முதல்வர் நாராயண சாமி உத்தரவிட்டிருந்தார்.
‘மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அரசு அதிகாரிகள் சமூக வலை தளங்களை பயன்படுத்தக் கூடாது. வாட்ஸ்அப் உள்ளிட்டவை அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளால் நிர் வகிக்கப்படுகிறது. இதனால் அரசு ரகசியங்கள் வெளிநாடுகளுக்கு கசி யும் வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றைப் பயன்படுத்தக்கூடாது’ என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந் தது. மேலும் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வாட்ஸ்அப், சமூக வலைதளங்களில் அரசு அதிகாரி கள் இடம்பெறுவதை தடை செய்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்து ஆளுநர் கிரண்பேடி நேற்று உத்தரவிட்டார். ‘புதுவை அரசுப் பணியாளர் நலத்துறை அனுப்பிய சுற்றறிக்கை, தற்போது பின்பற்றப்படும் வழிகாட்டுதல்கள், விதிகள், கொள்கைகளுக்கு முரணாக உள்ளதால் அது செல்லாது என அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருகிறது’ என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
‘வளமான புதுச்சேரி என்ற இலக்கை அடைய வேண்டும் என்றால் தொலைத்தொடர்பில் காலதாமதம் என்பது கூடாது. அதனால் முதல்வரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என்று தனது ட்விட்டர் பதிவிலும் கிரண்பேடி பதிவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமியின் உத்தரவுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் மறுஉத்தரவு பிறப்பித்திருப்பதால் புதுச்சேரியில் இவர்கள் இருவர் இடையேயான மோதல் மேலும் வலுக்கக் தொடங்கி உள்ளது.