Published : 29 Mar 2017 08:27 AM
Last Updated : 29 Mar 2017 08:27 AM

சூடுபிடிக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் களம்: முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் தொடங்கினர்

முக்கியத் தலைவர்கள் பிரச் சாரத்தை தொடங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக கட்சியும் சின்னமும் முடக் கப்பட்டதால் சசிகலா அணியினர் அதிமுக அம்மா கட்சி என்ற பெயரி லும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி என்ற பெயரிலும் தேர்தலை சந்திக்கின்றனர்.

அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட் பாளர் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்ற னர். இவர்களைத் தவிர திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார் பில் கங்கை அமரன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா உட்பட மொத்தம் 62 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சுயேச்சை வேட் பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக் கப்பட்டுவிட்டதால் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த மார்ச் 23-ம் தேதியில் இருந்தே டிடிவி தினகரன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனும் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கியுள்ளார். அவரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, முன்னாள் சபா நாயகர் பி.எச்.பாண்டியன் உள்ளிட் டோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ், முந்தைய திமுக ஆட்சி யின் சாதனைகளையும், தொகுதிப் பிரச்சினைகளையும் சொல்லி வாக்கு சேகரிக்கிறார். அவரை ஆத ரித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுவண்ணாரப் பேட்டையில் நேற்று மாலை பிரச் சாரத்தை தொடங்கினார். பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், மமக தலைவர் ஜவாஹி ருல்லா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் ஜெ.தீபா, நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரச்சாரத்தை தொடங் கினார். மாற்று அரசியலை முன் னிறுத்தியும், தொகுதிப் பிரச்சினை களுக்கு தீர்வு காண்பேன் என்று உறுதியளித்தும் வாக்கு சேகரிக் கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோக நாதன். அவரை ஆதரித்து தண்டை யார்பேட்டை பகுதியில் அக்கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பிரச்சாரத்தில் ஈடு பட்டார்.

தேமுதிக வேட்பாளர் மதி வாணன், கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிக்கிறார். கட்சித் தலைவர் விஜயகாந்த், உடல் நலமின்றி இருப்பதால் பிரச்சாரத் துக்கு வரவில்லை. இதனால், தேமுதிக தொண்டர்கள் உற்சாக மின்றி உள்ளனர். பாஜக வேட் பாளர் கங்கை அமரனை ஆதரித்து கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் களமிறங்கியுள்ள தால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x