Published : 18 Sep 2016 08:58 AM
Last Updated : 18 Sep 2016 08:58 AM

புதிய தொழிற்கொள்கையால் புதுச்சேரி சூழல் மாறும்: ஐஎஸ்டிடி மனிதவள மாநாட்டில் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

புதிய தொழிற்கொள்கையால் புதுச்சேரியின் சூழல் ஒராண்டில் மாறும். லெனோவா உட்பட மேலும் பலத்தொழிற்சாலைகள் இங்கு வர உள்ளன. முக்கியமாக தொழிற் சாலைகளுக்கான மின்கட்டணம் தமிழகம், ஆந்திரம், தெலங்கா னாவை விட புதுச்சேரியில் குறைவு என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இந்தியப் பயிற்சி மற்றும் வளர்ச்சி கழகம் (ஐஎஸ்டிடி) நடத்தும் மனித வள மாநாடு புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. தமிழில் நடந்த இந்த மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று பேசியது:

வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியா நோக்கி வர முக்கியக் காரணமுள்ளது. 40 வயதுக்கு குறைவானவர்கள் 60 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர். இதர நாடுகளில் 60 சதவீதம் பேர் முதியவர்கள். மனிதவளம் இருப்பதால் போட்டிப்போட்டு முதலீடு செய்ய வருகிறார்கள்.

நகரங்களை நம்பி கிராமங் கள் இருக்கக் கூடாது. அங்குள் ளோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தர மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தின. ஆனால், இப்பணிகள் வேகமாக நடைபெறவில்லை. அதற்கான முழு முயற்சி இல்லை. துறைகளில் மந்த நிலை இருக்கிறது. குறிப்பாக தொழிலாளர் துறைக்கு அதிக பங்குள்ளது. அலுவலக பணிகளிலேயே பலருக்கும் நாட்டம் இருந்ததால் இப்பாதிப்பு நிகழ்ந்தது. திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு உந்துதல் தரவில்லை. அதை தருவது அவசியம்.

புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை உருவாக்கி யுள்ளோம். லெனோவா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க முதல் கட்டமாக ரூ. 300 கோடி முதலீடு செய்ய உள்ளது. 1600 பொறியாளர்களுக்கு திறன் பயிற்சி 6 மாதங்கள் அளித்து பணிவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக அரசே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க விரும்புகிறது. ஐஎஸ்டிடி நிறுவனமும் இணைந்து திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

புதிய தொழிற்கொள்கையால் வைரம் பட்டை தீட்டும் தொழிற் சாலை, மோட்டார் உதிரிபாகங்கள் தொழிற்சாலை, பிளாஸ்டிக் உதிரி பாகத் தொழிற்சாலை, கணினி தொழிற்சாலைகள் வர வாய்ப் புண்டு. ஆலைகளுக்கான மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு தெலங் கானாவைவிட ரூ.2.60ம், ஆந்திரத்தை விட ரூ.2.50ம், தமிழகத்தை விட ரூ.1.10ம் புதுச்சேரியில் குறைவு.

புதிய தொழிற்கொள்கையால் புதுச்சேரியின் சூழல் ஒராண்டில் மாறும். மீண்டும் புதிய சகாப்தம் புதிய தொழிற்கொள்கையால் உருவாகியுள்ளது. பல நிறுவனங்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்று தெரிவித்தார்.

ஐஎஸ்டிடி தலைவர் டாக்டர் கார்த்திகேயன்:

புதுச்சேரியின் தொழில் மேம்பாட்டுக்கு அனைத்து வகையிலும் ஐஎஸ்டிடி துணை நிற்கும். இந்நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும். இதன்மூலம் திறன் மேம்பாட் டுத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வமாக உள்ளோம். இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி தொழில் துறை அமைச்சர் ஷாஜகான்:

கல்வி முறையில் மாற்றம் அவசியம் வேண்டும். குறிப்பாக திறன்மேம்பாடு முக்கிய தேவையாகியுள்ளது. உயர்கல்வி பயின்றோருக்கு திறன் சார்ந்த மேம்பாட்டு பயிற்சியும் அவசியமா கிறது. இலவசங்கள் தருவதை விட திறன் சார்ந்த பயிற்சி முக்கியம். ஏனெனில் இலவசங்கள் சோம் பேறித்தனத்தை வளர்க்கும். முதல் கட்டமாக 5,000 மாணவர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி தர உள்ளோம். அதை படிப்படியாக ஒரு லட்சம் மாணவர்களாக அதிகரிப்போம். வளமான மனிதவளம் உருவாக்கு வதே இலக்கு.

இந்திய பயிற்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் புதுச்சேரி மக்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த பயிற்சிகள் அளிக்க உதவினால் புதுச்சேரி அரசு அனைத்து உதவி களையும் செய்யும். திறன் மேம்பாட்டுக்காக தேவைப்படும் இடத்துடன் கட்டமைப்புகளையும் பயன்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பாக திட்டம் தயாரித்தால் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் என்எல்சியின் மனித வள பிரிவு நிர்வாக இயக்குநர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x