சிறையில் உள்ள பேரறிவாளனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ், வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்

சிறையில் உள்ள பேரறிவாளனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ், வைகோ, வேல்முருகன் வலியுறுத்தல்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை ராஜேஷ் கண்ணா என்ற தண்டனைக் கைதி இரும்புக் கம்பியால் தாக்கி யுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழகத்தின் பாதுகாப் பான சிறை என்று கூறப்படும் வேலூர் சிறையில், பேரறி வாளனை தாக்குவதற் கான இரும்புக் கம்பி கைதி ராஜேஷ் கண்ணாவுக்கு எப்படி கிடைத்தது என்று தெரிய வில்லை. பேரறிவாளன் மீதான தாக்குதல் திட்டமிட்டது போல் தெரிகிறது.

சிறை விடுப்பில் அனுப்ப..

இதற்கு மேலும், பேரறிவா ளனை அங்கே வைத்திருப்பது நல்லது அல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டு களாக சிறை தண்டனை அனுப வித்து வரும் பேரறிவாளன் உள் ளிட்ட 7 தமிழர்களையும் அரசிய லமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்ய தாமதமானால், அதுவரை 7 பேரையும் சிறை விடுப்பில் அனுப்ப தமிழக அரசு முன்வர வேண்டும். சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை சக சிறைவாசி தாக்கியது கண்டிக்கத்தக்கது. சிறையிலேயே பேரறிவாளனை கொல்வதற்கு நடத்தப்பட்ட முயற்சியாகவே தோன்றுகிறது. இந்த தாக்குதலின் பின்னணியை அரசு கண்டறிய வேண்டும். பேரறிவாளனை 3 மாதங்கள் பரோலில் விடுவிக்க வேண்டும். மேலும், பேரறிவாளனுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்:

பேரறி வாளன் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்துள்ளது. பேரறிவாளனை கொலை செய்ய முயற்சித்த ராஜேஷ் என்பவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை 161-வது பிரிவைப் பயன்படுத்தி விடுவிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in