Published : 29 May 2017 09:03 AM
Last Updated : 29 May 2017 09:03 AM

பள்ளிகளில் பாடபுத்தகம் ஜூன் 7-ம் தேதி விநியோகம்: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி புத்தகங்கள் விற்பனை மையம்

பாடநூல் கழகம் தகவல்

அண்ணா நூற்றாண்டு நூலகத் தில் பள்ளி பாட புத்தகங்கள் விற்பனை மையம் அமைக்கப் பட்டு வருவதாகவும், ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கும் போது பாடபுத்தகம் உறுதியாக மாணவர்களுக்கு கிடைக்கும் என்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு களுக்கு தேவையான இலவசம் மற்றும் விற்பனைக்கான புத்தகங் கள் அச்சிடப்பட்டு, தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புவரை முதல் பருவத்துக்கு ஒரு கோடியே 22 லட்சம் இலவச புத்தகம், 79 லட்சத்து 77 ஆயிரம் விற்பனைக்கான புத்தகங்கள், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பிற மொழி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

10-ம் வகுப்புக்கு ஆண்டு முழுமைக்கும் 39 லட்சத்து 48 ஆயிரம் இலவச புத்தகம், 15 லட்சத்து 51 ஆயிரம் விற்பனைக்கானது, பிளஸ் 1 வகுப்புக்கு 59 லட்சத்து 12 ஆயிரம் இலவசம், 20 லட்சத்து 50 ஆயிரம் விற்பனைக்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 வகுப்புக்கு 59 லட்சத்து 45 ஆயிரம் இலவசம் மற்றும் 23 லட்சத்து 59 ஆயிரம் விற்பனை புத்தகங்கள் தயாராகியுள்ளன.

இலவச புத்தகங்கள் அனைத் தும் சம்பந்தப்பட்ட 67 கல்வி மாவட்ட அலுவலகங்களின் தேவைக்கு ஏற்ப 100 சதவீதம் அனுப்பப்பட்ட அப்பாட நூல்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கள் மூலம் நேரடியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 7-ம் தேதி பள்ளி திறக் கும்போது உறுதியாக புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.

விற்பனை புத்தகங்கள்

கடந்தாண்டு முதல் விற்பனைக் கான புத்தகங்கள் சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந் தாண்டு 12 ஆயிரத்து 240 பள்ளிகள் முன்பதிவு செய்துள்ள னர். அதற்கேற்ப புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான இணையதளம் ‘www.textbookcorp.in’ ஆகும்.

சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 27-ம் தேதி வரை ரூ.39 கோடியே 13 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன.

புத்தகங்களை இணையதளத் தின் மூலம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் தனி நபர்கள் அவர்கள் குறிப்பிடும் முகவரியிலேயே அஞ்சல் வழியில் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது சேவை மையம் மூலமும் புத்தகங்களை பெறலாம். பதிவு செய்த புத்தகங்கள் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்பதால், விற்பனை நோக்கில் ஒரே தலைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை பதிவு செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பது தடுக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழக தலைமையிடத்தில் பிரத்யேக மையங்கள் மூலம் விற்கப்படுகிறது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைமை நூலகத்துக்கும் போட்டித் தேர்வுக்கு பயன்படும் வண்ணம் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பாடநூல் விற்பனை நிலையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x