

போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (54). தனியார் நிறுவன ஊழியர். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக வேலைக்குச் சென்றார். திருநீர்மலை அருகே சென்றபோது திடீரென கார் மோதியதில் பாஸ்கரன் அதே இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக் குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சென்னை சேத்துபட்டைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சித்தார்த் என்பவரை கைது செய்தனர்.
கிழக்கு தாம்பரத்தில்
கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந் தவர் ஜார்ஜ் (54). கார்பென்ட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சிட்லபாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.