ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷன் அமைக்க ஓபிஎஸ் உறுதி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
'அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130-க்கும் மேற்பட்டோரை காணவில்லை அவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' எனக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தின் முன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார். | படம்: ம.பிரபு
'சசிகலாவின் இலக்கு சொத்து சேர்ப்பது'
"சொத்து சேர்ப்பது மட்டுமே சசிகலாவின் இலக்கு. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து தனியார் டி.வி. சேனல் ஒன்று தகவல்களை வெளியிடும். தற்போதைய சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு பொறுப்பிலிருந்தும் அவரை அகற்றக்கூடாது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் துணை நிற்பேன்" என முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சசிகலா எழுதிய மன்னிப்புக் கடிதத்தின் நகல் காட்டப்பட்டது. அதில், அவர் தனது பதவி ஆசை இல்லை என்பதை குறிப்பிட்டிருந்தது சுட்டிக் காட்டப்பட்டது.
