

குப்பையில் இருந்து டைல்ஸ் தயாரிக்கும் பணியை ஹைதராபாத் மாநகராட்சி மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
மறைமலைநகர் நகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பையை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் டைல்ஸ் தயாரிக்க திட்டமிடப்பட்டுள் ளது.
இதற்காக தனியார் நிறுவனத் துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி சோதனை அடிப்படையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணியை நேற்று தெலங் கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் மேயர் பி.ராம் மோகன், ஹைதராபாத் மாநகராட்சி யின் முதன்மை பொறியாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அவர்களுடன் மறைமலைநகர் நகராட்சி ஆணையர் விமலா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.