

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் தனி யார் பள்ளிகள் நாளை செயல்படாது என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலாளர் டி.சி.இளங்கோவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சேலத் தில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல நல்ல திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார். அதுபோல் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி அனைவரும் கல்வி பெறும் நோக்கில் விஷன் 2023 என்ற புதிய திட்டத்தையும் அவர் செயல்படுத்தினார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 4,500 தனியார் பள்ளிகள் 7-ம் தேதி (நாளை) செயல்படாது. அன்றைய தினம் எங்களது உணர்வு களை தெரிவிக்கும் வகையில், சென்னை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலக வளாகத் தில் கவனஈர்ப்பு கூட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கல்லூரிகள் நாளை வேலைநிறுத்தம்
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ள உறுப்புக் கல்லூரிகள் 7-ம் தேதி (நாளை) ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித் துள்ளன.
இதனால், நாளை ஒருநாள் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப் பட்டுள்ளதாக கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி நிர்வாக சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம் தெரிவித்துள்ளார்.