Published : 04 Jun 2016 07:39 AM
Last Updated : 04 Jun 2016 07:39 AM

காங்கிரஸ் கட்சியிலிருந்து விஷ்ணு பிரசாத் நீக்கம்: இளங்கோவன் அதிரடி நடவடிக்கை

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் நீக்கப் பட்டுள்ளார்.

நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணுபிரசாத், 8 ஆயிரத்து 527 வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தார்.

இது தொடர்பாக வாரமிருமுறை இதழுக்கு விஷ்ணுபிரசாத் அளித்த பேட்டியில், ‘‘41 இடங்களில் போட்டி யிட்ட காங்கிரஸ் 33 இடங்களில் தோற்றதற்கு இளங்கோவனின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம். மூத்த தலைவர்கள் யாரையும் இளங்கோவன் மதிப்ப தில்லை. ப.சிதம்பரம், தங்கபாலு என மூத்த தலைவர்களின் பொறுப்பில் தலா 5 தொகுதிகளை ஒப்படைத்திருந்தால் காங்கிரஸ் குறைந்தது 30 தொகுதிகளில் வென்றிருக்கும். தோல்விக்குப் பொறுப்பேற்று அவராகவே பதவி விலக வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் மைத்துனருமான முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத், கடந்த 31-ம் தேதி வெளியான வாரமிருமுறை இதழில் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

தமிழக காங்கிரஸின் தேர்தல் அணுகுமுறைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறுகளை பரப்பும் நோக்கத் தில் வெளிப்படையாக கருத்துக் களை கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருது கிறோம். எனவே அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவரோடு காங்கிரஸ் கட்சியினர் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x