இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

இலங்கையில் இருந்து 35 மீனவர்கள், 120 படகுகளை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
Updated on
1 min read

இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள 35 தமிழக மீனவர்களை யும், அவர்களுக்குச் சொந்தமான 120 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந் திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதா வது:

தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் பிப்ரவரி 7-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சம்பவத்தை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் 7 பேர் ராமேசுவரம் கடல் பகுதியில் இயந்திரப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, படகு தத் தளித்தது. வேறொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர் கள் அங்கு வந்து இயந்திரக் கோளாறை சரிசெய்துள்ளனர். அப் போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, 10 மீனவர்களையும் கைது செய்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றனர்.

மனிதாபிமானம் இல்லாத கடற்படையினரின் செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது. சர்வதேச கடல்சார் விதிமுறைகளின்படி, இத்தகைய படகுகளை மனிதாபி மான முறையில் கையாள வேண்டும். தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் அமைதியான முறையில் மீன்பிடிக்க அனுமதிக் கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்துகிறேன்.

தமிழக மீனவர்களுக்குச் சொந்த மான 119 மீன்பிடி படகுகள் ஏற் கெனவே இலங்கை அரசு வசம் இருப்பதை தங்களுக்கு நினைவூட் டுகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் போட்டிருப் பது, அவற்றில் உள்ள சாதனங் களை பழுதடையச் செய்துவிடும். படகுகளுக்கு சேதம் ஏற்பட்டால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மீனவர்களின் ஒரே வாழ்வாதாரமான மீன்பிடி படகு களை புதுப்பிக்கப்பட்ட நிலையில் மீட்டுத் தருமாறு வலியுறுத்து கிறேன். இலங்கை சிறையில் வாடும் 35 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 120 மீன்பிடி படகுகளையும் உடனடி யாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, 7-ம் தேதி கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப் படாமல் மனிதாபிமான அடிப் படையில் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி, அதிமுக பொதுச் செய லாளர் சசிகலாவும் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதி யுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in