Published : 08 Jul 2016 09:25 AM
Last Updated : 08 Jul 2016 09:25 AM

சாலையோர மரங்களுக்கு மழைநீர் கிடைக்க நடைபாதைகளில் கான்கிரீட் ஜன்னல்: சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னை மாநகரப் பகுதியில் மரங்களுக்கு மழைநீர் கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது.

சென்னை, விரிவாக்கம் செய் யப்பட்ட பகுதிகள் உட்பட மொத்தம் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, மக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்க, குறைந்தபட்சம் 144 சதுர கிலோ மீட்டர் (33.3 சதவீதம்) பரப்பளவு பசுமை போர்வை இருக்க வேண் டும். ஆனால் சென்னையில் 26 சதுர கிலோ மீட்டர் (6.25 சதவீதம்) பரப் பளவு மட்டுமே பசுமை போர்வை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரங் களில் கான்கிரீட் நடைபாதைகள் அமைக்கப்படுவதால், அப்பகுதி யில் வளர்ந்துள்ள மரங்களுக்கு, மழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீர், வேர்களை எட்டாத நிலை ஏற்படுவதாகவும், அதனால், இருக் கும் மரங்களும் அழிவை நோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டிருப்ப தாகவும் கூறப்படுகிறது. மரங் களின் வேர்களுக்கு நீர் செல்ல உரிய ஏற்பாடுகளை மாநகராட்சி செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

அதனைத் தொடர்ந்து மாநக ராட்சி நிர்வாகம், சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங் களைச் சுற்றி, மழைநீர் செல்லும் விதமாக, கான்கிரீட் ஜன்னல்களை பதித்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, “சென்னையில் மாநகராட்சி பரா மரிப்பில் சுமார் 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. அதில் 33 ஆயிரம் சாலையோர மரங்கள் உள்ளன. அவற்றில் கான்கிரீட் நடைபாதைகள் அமைக் கப்பட்ட இடங்களில் 19 ஆயிரம் மரங்கள் உள்ளன. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங் களைச் சுற்றி, கான்கிரீட் ஜன்னல் களை பதித்து இருக்கிறோம். மீதம் உள்ள மரங்களைச் சுற்றி கான்கிரீட் ஜன்னல்கள் பதிக்கும் பணி விரைவில் முடிக்கப்படும்” என்றனர்.

பெசன்ட்நகரில் மழைநீர் வேர்களைச் சென்றடையும் வகையில், மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் ஜன்னல்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x