சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை தடுத்திடுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை தடுத்திடுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
Updated on
1 min read

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணைகட்ட எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி என்ற இடத்தில் கேரள அரசு அணைகட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மத்திய சுற்றுச் சூழல் துறையும், வனத்துறையும் அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளன.

மேற்கண்ட துறைகள் அனுப்பிய கடிதத்திற்குத் தமிழக அரசு பதில் தெரிவிக்காததால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுளளது. சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து எந்த விதமான கடிதமும் வரவில்லையென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட கருத்துப் பரிமாற்றம் மூலம் மக்களை பழிவாங்கும் முயற்சியில் ஆட்சியினர் ஈடுபடக் கூடாது.

சிறுவாணி தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. சிறுவாணி தண்ணீரில் கேரளவிற்கு சிறிதளவு உரிமை கூட கிடையாது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கி செல்லும் தண்ணீரில் ஒரு சொட்டுக் கூட தமிழ்நாட்டுக்குத் தர கேரளம் தயாராக இல்லை.

இந்நிலையில் அட்டப்பாடியில் அணையைக் கட்டி தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரை கேரள அரசு எடுத்துக் கொள்ளுமானால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் விவசாயி உற்பத்தி பாதிப்பதுடன் பல லட்சம் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

ஆகவே கேரளாவின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசும் அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று துரைமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in