

மதுரையில் நாளொன்றுக்கு 25,000 லிட்டர் கொள்ளளவு திறன்கொண்ட, பல்வேறு வகையான நறுமண பால் தயாரிக்க புதிய உயர்வெப்ப நிலையில் பதப்படுத்தப்படும் ஆலை ரூ.40 கோடி செலவில் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், "ஆவின் பொருட்களை பிரபலப்படுத்தும்விதமாக கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும்.
மதுரையில் நாளொன்றுக்கு 25,000 லிட்டர் கொள்ளளவு திறன்கொண்ட, பல்வேறு வகையான நறுமண பால் தயாரிக்க புதிய உயர்வெப்ப நிலையில் பதப்படுத்தப்படும் ஆலை ரூ.40 கோடி செலவில் அமைக்கப்படும்" என்றார்.