Published : 18 Mar 2017 10:08 AM
Last Updated : 18 Mar 2017 10:08 AM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலை. பதிவாளருக்கு ரூ. 3,000 அபராதம்

நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர் சந்திரமோகன். அருந்ததியினருக்கான ஒதுக்கீட்டின்கீழ் இவரைப் பேராசிரி யராக நியமிக்கும்படி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத் திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் பல்கலைக் கழகத்துக்கு எதிராக சந்திர மோகன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, “உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரண்டரை ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. அதற்கான காரணத்தையும் இதுவரை விளக்கவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணே சனுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். இந்த அபராதத் தொகையை 7 நாட்களுக்குள் அவர் செலுத்தாவிட்டால் 15 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் அரசியல்சாசனத்தை வகுத்தவர்கள் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படும் என நம்பிக்கை வைத்தனர். ஆனால் இந்த வழக்கில் அதுமீறப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் முடிந்த அளவுக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத் தாமல் இழுத்தடித்துள்ளது தெளிவாக தெரிகிறது” எனக் கூறி வழக்கு விசாரணையை மார்ச் 22-ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x