ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எப்போது?- பிரவீண்குமார் விளக்கம்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் எப்போது?- பிரவீண்குமார் விளக்கம்
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை எப்போது நடத்து வது என்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம்தான் தீர்மானிக்கும். ஒரு தொகுதியில் காலியிடம் ஏற்பட்டாலோ, அந்த தொகுதி உறுப்பினர் பதவியை இழந்தாலோ குறிப்பிட்ட நாளில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது விதி.

சட்டப்பேரவை தொகுதி காலி யானது பற்றிய அறிவிக்கையை சட்டப்பேரவை செயலகம் வெளி யிடவேண்டும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம். அது வெளியா னதும் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

சட்டப்பேரவை அறிவிக்கை வெளியிடாவிட்டால் என்ன ஆகும் என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பினர். அதுபோன்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் சொல்வது சிரமம். எனினும் 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in