Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

டிக்கெட் பரிசோதனையில் சிக்காமல் இருக்க ரயிலிலிருந்து குதித்த கல்லூரி மாணவர் பலி

டிக்கெட் பரிசோதகருக்குப் பயந்து ரயிலிலிருந்து கீழே குதித்த கல்லூரி மாணவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, அம்மையார்குப்பத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமியின் மகன் ராமன் (19). இவர், ஆவடி அடுத்த பட்டாபிராமில் உள்ள தனது சித்தப்பா வீட்டிலிருந்து, வேப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து வந்தார்.

புதன் கிழமையன்று நண்பர்களுடன் முதல் வகுப்பு பெட்டியில் ஏறிஉள்ளார். அப்போது, டிக்கெட் பரிசோதகரைக் கண்டு அச்சமடைந்த ராமன், ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது கால் ரயிலில் அடிபட்டு துண்டானது. இதையடுத்து, கல்லூரி வாகனத்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் ராமன் இறந்து விட்டார்.

இந்தத் தகவல் அறிந்த, தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து, ரயில்வே இருப்புப்பாதை போலீஸ் டி.எஸ்.பி., தில்லை நடராஜன், திருவள்ளூர் டி.எஸ்.பி., சந்திரசேக ரன், செவ்வாப்பேட்டை இன்ஸ் பெக்டர் அய்யனாரப்பன், வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வந்தனர்.

மறியலில் ஈடுபட்ட மாணவர் கள், டிக்கெட் பரிசோதகர்தான் ராமனை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கேட்டபோது, மாணவர் ராமனை டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைக் கேட்டு கீழே தள்ளி விடவில்லை எனவும், மாணவர்தான் அச்ச மடைந்து ரயிலில் இருந்து கீழே குதித்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.

மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து போலீஸாரால் விரட்டியடிக்கப்பட்டனர். திருவள்ளூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x