

வெப்பத்தை தணிக்க தமிழகம், புதுச்சேரிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
தேமுதிக தலைவர் விஜய காந்த் பிறந்தநாளான ஆகஸ்ட் 25-ம் தேதியை வறுமை ஒழிப்பு தினமாக அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. இதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலு வலகத்தில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ கத்தில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை விஜயகாந்த் தொடங்கி வைத்தார். எம்ஜிஆர் காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை மற்றும் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பரிசுகளை அவர் வழங்கினார்.
இதையடுத்து, தேமுதிக தலைமை அலுவலக வளாகத் தில் கட்சியின் தலைவர் விஜய காந்த், பிரேமலதா, கட்சியின் மாநில இளைஞர் அணித் தலை வர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழா வில் விஜயகாந்த் பேசும்போது, “இந்த ஆண்டு வெப்பத்தை தணிக்க மரக்கன்றுகளை வழங்குகிறோம்” என்றார்.