Published : 27 Feb 2017 10:15 AM
Last Updated : 27 Feb 2017 10:15 AM

இதுவரை 77 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது; தட்டம்மை தடுப்பூசி முகாம் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு: பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவிப்பு

தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தட்டம்மை-ரூபல்லா தடுப்பூசி திட்ட சிறப்பு முகாம்கள் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங் களில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி வரும் 28-ம் தேதி வரை (நாளை) நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி முகாம்மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் 9 வயது முதல்15 வயது வரையுள்ள சிறுவர் களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 20 நாட்களில் தமிழகம் முழுவதும் 77 லட்சம்பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள் ளது. இன்னும் 50 சதவீதத்துக்கும் மேல் தடுப்பூசி போட வேண்டும். அதனால் தடுப்பூசி முகாம் மார்ச் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணைசுகாதார நிலையங்களில் மட்டும்தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இவற்றுடன் சேர்த்து ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், குறிப்பிட்ட தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப் படும். ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்.

தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் மற்றும் விடுபட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு எப்படி தடுப்பூசி போடுவது என்பது குறித்த தகவல்களுக்கு மருத்துவ உதவி சேவை மையத்தை 104 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தடுப்பூசி திட்ட சிறப்பு முகாம் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 5 மாநிலங்களிலும் இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தட்டம்மை-ரூபல்லா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x