

அந்நிய செலாவணி மோசடி புகார் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதேபோல் சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெமா (FEMA) சட்டவிதிகளின்படி அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாசன் ஹெல்த் கேர் லிமிடட் நிறுவனர் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்துக்கும் விளக்கம் கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.