விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் விரிவுரையாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை (சனிக்கிழமை உள்பட) பெற்றுக்கொள்ளலாம்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 30-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in