Published : 06 Apr 2017 08:34 AM
Last Updated : 06 Apr 2017 08:34 AM

வீடுகளின் சுவரில் அடையாள குறியீடு: நள்ளிரவில் பணம் கொடுப்பதாக புகார்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சில குடியிருப்பு பகுதிகளில் வீடுகளின் சுவரில் அடையாளக் குறியீடு செய்து, அதன்மூலம் மக்களுக்கு நள்ளிரவில் பணம் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாக் காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்தபோதும், அரசியல் கட்சி யினர் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நள்ளிரவில் பணம், பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

காசிமேட்டில் உள்ள திடீர் நகர், பல்லவன் நகர் பகுதிகளில் சில வீடுகளில் சுவரின் முன்பகுதியில் ஆங்கில எழுத்துக்கள், எண்களில் கருப்பு மை மூலம் எழுதப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அரசியல் கட்சி தொண்டர்களின் வீடுகளை எளிமையாகக் கண்டறிய, சம்பந்தப்பட்ட கட்சிகளின் கிளை நிர்வாகிகள் கருப்பு அல்லது நீல நிற மை பேனா மூலம் ஆங்கில எழுத்துக்கள், எண்களை குறியீடுகளாக எழுதியுள்ளனர். இந்த அடையாளத்தை கொண்டு நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பணப் பட்டுவாடா செய்கின்றனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளிக்க முயற்சித்த போது, நீண்ட நேரம் போன் தொடர்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு புகார் கொடுத்தோம். தேர்தல் அதிகாரிகள் இங்கு வருவதற்குள், கட்சியினர் பணத்தை விநியோகித்து விட்டு சென்று விடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x