

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாவிட் டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று சுயநிதி பாலிடெக்னிக் கல் லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப் பித்துள்ளது.
இது தொடர்பாக தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னூ அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:
பொறியியல் டிப்ளமா படிப்பு கள் வழங்கும் அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் வரும் கல்வி ஆண்டில் (2017-18) அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீ காரத்தை புதுப்பித்த பின்னரே மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாவிட்டால் கண்டிப்பாக மாண வர் சேர்க்கையை மேற் கொள்ளக் கூடாது என்று கல்லூரிகளின் முதல் வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏஐசிடிஇ அனுமதி விதிமுறை களின்படி, அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க முடியும்; கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும்; மாணவர் சேர்க்கையை நிறுத்த முடியும்; இடங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும். ஒருவேளை வரும் கல்வி ஆண்டுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாமல் மாணவர் கள் சேர்க்கப்பட்டால் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப் பட மாட்டாது. அதோடு அங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப் பிக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.