Published : 28 Oct 2015 09:55 AM
Last Updated : 28 Oct 2015 09:55 AM

மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்துக்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக பேரூராட்சி தலைவர், 2 பேர் கைது

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்துக்காக 2 குளக் கரைகள் மற்றும் அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் கூடுவாஞ்சேரி பேரூராட்சி தலைவர் உட்பட 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திமுக பொருளாளர் ஸ்டாலின், தமி ழகம் முழுவதும் 'நமக்கு நாமே' விடியல் மீட்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதி யாக நவம்பர் 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில், திமுக தலைவர் கருணாநிதியும் பங்கேற்கிறார்.

இந்நிலையில் இந்த கூட்டத்துக்காக ஆப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்த மான 350 ஏக்கர் நிலத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.

இந்த நிலத்துக்கு அருகே இந்து அறநிலைய துறையின் 2 குளங்களும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் அரசு நிலமும் உள்ளது. தனியார் நிலத்தை சமன் செய்யும்போது தூர்ந்த நிலையில் இருந்த இந்த 2 குளங்களையும் திமுகவினர் சமன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் செங்கல் பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில், வட்டாட்சியர் தனலட்சுமி மற்றும் வருவாய் துறையினர் நிலத்தை அளவிட்டு, அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

இந்நிலையில், ஆப்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக, கூடுவாஞ்சேரி பேரூராட்சித் தலைவர் தண்டபாணி, ஆப்பூர் கிராம திமுக நிர்வாகிகள் சந்தானம், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்து பாலூர் போலீஸார் நேற்று கைது செய் தனர். பின்னர், அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மதுராந்தகம் கிளை சிறையில் அவர்கள் அடைக்கப் பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x