

ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் டிபிஐ அலுவலக முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக உளவு தகவல் சேகரிப்பதில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் கான தடையை நீக்கக் கோரி கடந்த மாதம் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 7-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டம் குறித்து நுண்ணறிவு பிரிவு போலீஸார் முன்னரே தகவல் தெரிவிக்கா ததால்தான் அது தீவிரம் அடைந்த தாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விளக்கம் கேட்டிருந்தார். இதேபோல் போராட்டக்களத்தில் இருந்த அனைத்து நுண்ணறிவு போலீஸாரி டமும் கள நிகழ்வுகள் குறித்த தகவல் கேட்கப்பட்டுள்ளது.
இதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த தகவலையும் நுண்ணறிவு போலீ ஸார் முன்னரே தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது தகவல் சேகரிப்ப தில் ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணம் குறித்து ஆலோசிக்கப் பட்டது. கூடுதல் காவல் ஆணை யர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இறுதியில், நுண்ணறிவு ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். வேறு ஒரு அதிகாரி செய்த தவறுக்காக ஆய்வாளர் மற்றும் காவலர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.