தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு: மாவட்டம் வாரியாக கடைகளின் எண்ணிக்கை வெளியீடு

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவு: மாவட்டம் வாரியாக கடைகளின் எண்ணிக்கை வெளியீடு
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத் தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடைகளை மூடுவதற் கான உத்தரவை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

அரசு உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர்கள், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள் ஆகியோர் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூன் 19-ம் தேதியிலிருந்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

சென்னை மண்டலத்தில் அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகள், கோவை மண்டலத்தில் 60 கடைகள், மதுரை மண்டலத்தில் 201 கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 கடைகள், சேலம் மண்டலத்தில் 48 கடைகள் என மொத்தம் 500 கடைகள் மூடப்படுகிறது. அதில் உள்ள இருப்பு மதுக்கள் மீண்டும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த கடைகள் மூடப்படுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். இதற்கான உத்தரவு தனியாக வெளியிடப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in