

சென்னை மாநகராட்சி 35, 166 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தேர்வான அதிமுகவினர் இருவர் மாமன்ற உறுப்பினர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இதில் 166-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 35-வது வார்டில் மட்டும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் ஏ.டேவிட் ஞானசேகரன் 19,676 வாக்குகள் பெற்று, 18,154 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெற்றார். வெற்றி பெற்ற இரு அதிமுக வேட்பாளர் களும் சென்னை மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கும் நிகழ்ச்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான விக்ரம் கபூர் அலுவலகத்தில், அவரது முன் னிலையில் வெற்றிபெற்ற இருவரும் மாமன்ற உறுப்பினர்களாக பதவி யேற்றுக்கொண்டனர். அப்போது மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பா.பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் மதுசூதனன், வட சென்னை எம்பி டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆலந்தூர் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.