இயக்குநர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்

இயக்குநர் கவுதமன் உண்ணாவிரதம் வாபஸ்
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் சுமார் 50 பேர் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் கடந்த 13-ம் தேதி காலை மறியலில் ஈடுபட்டனர். மேம்பாலப் பாதையில் சாலையின் குறுக்கே இரும்பு சங்கிலியைக் கட்டி பூட்டினர். இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

பரங்கிமலை போலீஸார் விரைந்து சென்று சங்கிலியை அறுத்து போக்குவரத்தை சீர் செய்தனர். கவுதமன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் 14-ம் தேதி முதல் கவுதமன் உட்பட 6 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுடன் சிறைத்துறை அதிகாரி ஜெயராமன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று காலை உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in