

தமிழகத்தில் மக்களின் உணர்வு களுக்கு எதிராக ஆட்சி நடைபெறு கிறது என்று உழவர் உழைப்பாளர் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து, திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
கடந்த 18-ம் தேதி, சட்டப் பேரவையில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டது. விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம் என அனைத்துத் தரப்பின ரும் விரும்பாத நிலையில், சிறையில் இருக்கும் சொத்துக்குவிப்பு குற்றவாளியான சசிகலாவின் பினாமி ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுகிறது. ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஆட்சி நடக்கிறது. இதுதொடர்பாக, வரும் 22-ம் தேதி திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி பங் கேற்கும். ரகசிய மறுவாக்கெடுப்பை நடத்த சட்டப்பேரவைத் தலைவ ருக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.