

தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்த 35 ஊழியர்களையும் விடுவிக்குமாறு அட்வன் போர்ட் நிறுவனம் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அட்வன் போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பல் கடந்த 11-ம் தேதியன்று தூத்துக்குடி கடற் பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது.
அதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கப்பல் எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அட்வன் போர்ட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சீமேன் கார்டு ஓகியோ கப்பல் ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் நிறுவனத்தின் தலைவர் லிலியம் எச் வாட்சன் அளித்த பேட்டி ஒன்றில் கப்பலில் இருந்த ஆயுதங்கள் கடற் கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே வைத்திருந்ததாக கூறியுள்ளார்.