

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குவதால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர்.
எனினும், சுற்றுலாப் பயணிகளுக் கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் செக் போஸ்ட் கள் ‘ஆபரேஷன் ஆம்லா’ போன்ற ஒத்திகை நிகழ்ச்சியின்போது மட் டுமே செயல்படுகின்றன. கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும் கண் காணிப்பில் ஈடுபட்டாலும் கடற் கரையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க முடியவில்லை.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பட்டிபுலம் கடற்கரையில் காதலியை கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துகொண்டார். மீனவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே உடல்களை போலீ ஸார் மீட்டனர். இதேபோல், கடந்த ஜனவரியில் கடற்கரையில் நடந்து சென்ற செனிஜா முராரி என்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பெண்ணுக்கு வன்கொடுமை
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு கடற்கரை யில் சூரிய குளியலில் ஈடுபட்டிருந்த ஜெர்மன் நாட்டு பெண்ணை, மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தினால், மாமல்ல புரம் சுற்றுலா தலத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக ளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல்துறை மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மன் நாட்டு தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தில் அப்பெண்ணை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷிடம் கேட்ட போது, ‘பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. சந்தேகப்படும் நபர்கள் சிலரின் புகைப்படத்தை அப்பெண் ணிடம் காண்பித்து விசாரித்து வருகிறோம்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. எனினும், கடற்கரை யோர தனியார் கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சில கட்டிங்களில் கேமராக்கள் உள்ளன. அப்பகுதியில் கூடுதல் கேமராக் களை பொருத்த அறிவுறுத்தியுள் ளேன். ஜெர்மன் தூதரக அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டது தொடர்பாக நான் எதுவும் கூற முடியாது’ என்று அவர் தெரிவித்தார்.
மாதிரி புகைப்படம்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஜெர்மன் பெண் கூறிய அடை யாளங்களை வைத்து குற்றவாளி யின் மாதிரி புகைப்படத்தை போலீஸார் தயாரித்துள்ளனர். படத்தில் உள்ள அங்க அடையாளங்களின்படி, சந்தேகப் படும் நபரை யாரேனும் கண்டால் போலீஸுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு மாவட்ட எஸ்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புமணி வலியுறுத்தல்
இந்நிலையில், ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் வன் கொடுமை இழைத்தவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.