Published : 23 Jun 2016 08:43 AM
Last Updated : 23 Jun 2016 08:43 AM

‘மதுக்கரை மகராஜ்’ இறப்புக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு இ-மெயில் அனுப்ப இயக்கம் தொடக்கம்

கோவையில் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டு உயிரிழந்த ஒற்றை இளம் யானை குறித்த தகவல் களையும், அது பிடிபடும் வீடியோ காட்சிகளையும் முன்வைத்து சர்வதேச அளவில் கண்டன இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மதுக்கரையில் கடந்த 19-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை, டாப் சிலிப் - வரகளியாறு முகாமில் ‘டிரெயினிங் கிரால்’ எனப்படும் பயிற்சிக் கூண்டில் அடைக்கப் பட்டது. இந்த யானை, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தது.

இந்த யானையின் உயிரிழப்புக்கு நாடு முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் சர்வதேச அளவில் இ-மெயில் அனுப்பும் இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

அவர்களது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவில், “காடுகள் அழிப் பால் வனத்தைவிட்டு வெளியேறிய யானையைப் பிடித்து கிராலில் வைத்து துன்புறுத்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்து கும்கி யானை கள் மூலம் அதைத் துன்புறுத்தி யுள்ளனர். அந்த வனத்துறையினரே யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்வதைத் தடுக்க வேண்டும். அரசு சாராத விலங்கு நல அமைப்பு கள், விலங்கு நல வாரியம் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். மகராஜ் யானைக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அதனுடன், வந்த யானை பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள், செய்தித் தொகுப்புகளை இணைத்து, பிரதமர் மோடி, வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விலங்கு நல ஆர்வலரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர், விலங்கு நல வாரியம் உள்ளிட்டோரது இ-மெயில், ட்விட்டர் பக்கங்களுக் கும் அனுப்பி உள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான விலங்கு நல ஆர்வலர்கள் யானை இறப்பைக் கண்டித்து மெயில் அனுப்பும் இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

‘வனம் டிரஸ்ட் ஆப் இண்டியா’ அமைப்பைச் சேர்ந்த எஸ்.சந்திரசேகர் கூறும்போது, “கோவை யில் யானை கொல்லப்பட்டுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள் ளிட்ட நாடுகளைச் சேர்ந்த யானை ஆராய்ச்சியாளர்களும், இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்களும் கடும் கண்டனத் தைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக வனத்துறையின் செயல் பாடுகள் சரியில்லை என்பதே உண்மை. யானையின் இறப்பில் உள்ள தவறுகளை வெளிக் கொண்டு வரும் நோக்கிலேயே இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பகத் தின் கள இயக்குநர் கந்தசாமி, யானை அடைக்கப்பட்ட கூண்டின் தன்மை, வழங்கப்பட்ட உணவு, தண்ணீர் மேலும் கூண்டைச் சுற்றி உள்ள வனச்சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வனத் துறையினர் கூறும்போது, “யானை கூண்டில் இருந்து வெளி யேறும் முயற்சியில் தேக்கு மரத் தூணை தலையால் தாக்கியுள்ளது. இதில், யானை உயிரிழந்துள்ளது” என்றனர்.

வால்பாறையைச் சேர்ந்த நேச்சுரல் கன்சர்வேசன் பவுண் டேசன்’ அமைப்பைச் சேர்ந்த யானை ஆராய்ச்சியாளர் கணேஷ் ரகுநாதன் கூறும்போது, “கூண்டின் வலிமை வாய்ந்த தேக்கு மரத் தூண்களை தன்னுடைய தலையால் முட்டி உடைக்க யானை முயன்றுள் ளது. இதில் ஏற்பட்ட உள்காயத்தால் பாதிக்கப்பட்டு இறந்திருக்க வாய்ப்பு உள்ளது’’ என்றார். பிரேத பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் `தலையில் ஏற்பட்ட காயமே யானை உயிரிழக்கக் காரணம்’ என தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x