

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் இரு தேர்வு களையும் 2 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர்.
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத் தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரையும், அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9 முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. நாடு முழு வதும் 12-ம் வகுப்பு தேர்வை 3,503 மையங்களில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 பேரும் 10-ம் வகுப்பு தேர்வை 3,974 மையங்களில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 710 பேரும் எழுதினர்.
தமிழ்நாடு, ஆந்திரம், தெலங் கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் பகுதி களை உள்ளடக்கிய சென்னை மண் டலத்தில் 12-ம் வகுப்பு தேர்வை 935 பள்ளிகளைச் சேர்ந்த 59 ஆயி ரத்து 14 மாணவ-மாணவிகள் 466 மையங்களில் எழுதினர். இவர் களில் மாணவிகள் 25 ஆயிரத்து 364 பேர். அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வை 2,398 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 401 பேர் 649 மையங்களில் எழுதினர்.
10-ம் வகுப்பு தேர்வை பொதுத் தேர்வாக (போர்டு தேர்வு) எழுத விரும்பாத மாணவர்கள் பள்ளி அளவிலான தேர்வாக எழுதலாம். அந்த வகையில், பள்ளி அளவிலான தேர்வை 24 ஆயிரத்து 153 பேர் எழு தினர். 10-ம் வகுப்பு தேர்வை பள்ளி அளவிலான தேர்வாக எழுத வாய்ப்பு அளிக்கப்படுவது இந்த ஆண்டுதான் கடைசி வாய்ப்பாகும். அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை அனைத்து மாணவர்களும் பொதுத் தேர்வாகத்தான் எழுத வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.
சிபிஎஸ்இ பொதுத் தேர்வெழு தும் கிராமப்புற மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களை எளிதில் தெரிந்துகொள்ள இந்த ஆண்டு பிரத்யேக செயலி உருவாக்கப் பட்டிருந்தது. அதைப் பயன்படுத்தி கிராமப்புற மாணவர்கள் தங்களுக் கான தேர்வு மையங்களை எளி தாக தெரிந்துகொண்டனர்.
அதே போல் இந்த ஆண்டு புதிய முயற்சியாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதற் கான மாத்திரைகளையும், ரத்தத் தில் சர்க்கரை அளவை சீராக வைத் திருக்க உதவும் சாக்லேட், குளூக் கோஸ், சர்க்கரை உள்ளிட்ட இனிப்புகளை தேர்வறையில் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட னர். சென்னை நகரில் ஒருசில பள்ளிகளில் நீரிழிவு பாதித்த மாண வர்களுக்காக தேர்வுக் கூடத்தில் சிற்றுண்டி வசதிக்கும் ஏற்பாடு செய் திருந்தனர். சிபிஎஸ்இ-யின் இந்த புதிய முயற்சி மிகவும் வரவேற்கத் தக்கது என்று கீழ்ப்பாக்கம் ராஜாஜி பவன்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜித் பிரசாத் ஜெயின் தெரிவித்தார்.