விழுப்புரம் அருகே விபத்தில் பலியான 7 பேர் சடலத்தை வாங்க மறுப்பு

விழுப்புரம் அருகே விபத்தில் பலியான 7 பேர் சடலத்தை வாங்க மறுப்பு
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதி 7 பேர் உயிரிழந்த விபத்துக்குக் காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, பலியானவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அருள்வேதம் குடும்பத்துடன் சனிக்கிழமை தூத்துக்குடியிலிருந்து காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.உளுந்தூர் பேட்டை அருகே சாத்தனூரை கடக்கும்போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் அடித்து நின்றது. இதனால் பின்னால் வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி லாரிமீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அருள்வேதம், டேவிட் எத்திராஜ், சார்லஸ், ஜெபரின் ஜெனிஷா உள்ளிட்ட 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டனர்.

நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் திடீரென நிறுத்துமாறு லாரி ஓட்டுநருக்கு சைகை காட்டி யதால் தான் லாரி நிறுத்தப்பட்டது. எனவே, விபத்துக்கு போலீஸார் தான் காரணம். போலீஸார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை பலியானவர்களின் உடல் களை வாங்க மாட்டோம் என இறந்தவர்களின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த டி.எஸ்.பி. பாண்டியன், தாசில்தார் குமார் பாலன் ஆகியோர் வந்து போலீஸார் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in