Published : 15 Mar 2017 07:56 AM
Last Updated : 15 Mar 2017 07:56 AM

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: ஓபிஎஸ் இன்று டெல்லி செல்கிறார் - தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் தொடர்பாக விளக்கு வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார்.

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார்.

அதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரி வித்தது. இதையடுத்து, 70 பக்கங் கள் கொண்ட பதிலை வழக் கறிஞர்கள் மூலம் சசிகலா அனுப்பினார். அதில், அதிமுக சட்ட விதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாக வும், தன்னை முன்மொழிந்தவர் களே இப்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 61 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை தயாரித்தனர். அதை தேர்தல் ஆணையத்திடம் மைத்ரேயன் எம்.பி. நேற்று வழங்கினார்.

‘பொதுச் செயலாளரை நிய மிக்கும் அதிகாரம் கட்சி பொதுக் குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை. எனவே, சசிகலா நியமனம் செல்லாது. விதிகளை மாற்றுவதற்கு மட்டுமே பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என அதிமுக விதிகளில் கூறப்பட்டுள்ளது’ என விளக்கக் கடிதத்தில் தெரி வித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து விளக்குவதற்காக ஓ.பன்னீர்செல்வம் இன்று (புதன் கிழமை) டெல்லி செல்கிறார். இதுகுறித்து ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் சுவாமிநாதன் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக சசிகலா அளித்துள்ள பதிலுக்கு ஓபிஎஸ் அணி 61 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை தேர்தல் ஆணை யத்திடம் அளித்துள்ளது. இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து விளக்குவதற்காக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 9 பேர் கொண்ட குழு இன்று காலை 6.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறது.

இக்குழுவில் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன், செம்மலை, எம்.பி.க்கள் அசோக்குமார், பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு இன்று பகல் 12 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்திக்கிறது.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x