

கொரட்டூர் பகுதியில் ஸ்கை ரோனமஸ் பூச்சிகளால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் தா.கார்த்திகேயன் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: கொரட்டூர் ஏரியைச் சுற்றி யுள்ள பகுதிகளில் ஸ்கைரோனமஸ் பூச்சியின் தாக்கத்தைக் கட்டுப் படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் தா.கார்த்திகேயன் மற்றும் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் கொரட்டூர் சீனிவாசபுரம் பகுதியில் வாழும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். அப்போது, இரவு நேரங்களில் இந்த பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் கிருமிநாசினிகளை தெளித்து பூச்சிகளை கட்டுப் படுத்தவும், குளக்கரைகளிலும் அதன் ஓரங்களிலும் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை அமைத்து, பூச்சிகளைக் கவர்ந்து முற்றிலும் அழிக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அங்கு உடனடியாக கிருமிநாசினி மருந்துகள் அடிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் இப்பகுதியில் இவ்வளவு பூச்சிகள் உருவானது எப்படி என்பது குறித்து பூச்சியியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆய்வின்போது, பொது சுகா தாரத் துறை இயக்குநர் கே.குழந்தை சாமி, மாநகராட்சி துணை ஆணை யர் (சுகாதாரம்) ஆர்.கண்ணன், அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ அலெக்சாண்டர் ஆகியோர் உடனி ருந்தனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
200 வாத்துகள் விடப்பட்டன
ஸ்கைரோனமஸ் (வயல் பூச்சிகள்) கட்டுப்படுத்த மேற் கொள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, நெல் வயல்களில் பால் பிடிக்கும் பரு வத்தின்போது, இந்த வகை பூச்சிகள் மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாக இருக்கக்கூடியது. இது விவசாயிகளின் நண்பனும் கூட. குடியிருப்பு பகுதியில் அளவுக்கு அதிகமாக வந்துவிட்டதால், இதை இடையூறாக பார்க்க வேண்டி யுள்ளது. கொரட்டூர் ஏரியில், தற்போது உள்ள ஸ்கைரோனமஸ் புழுக்களை அழிக்கும் வித மாக 200 வாத்துகள் ஏரியில் விடப் பட்டுள்ளன. அந்த புழுக்களை கெண்டை மீன்களும் உண்ணும் என்பது தெரியவந்துள்ளது. அதனால் அந்த ஏரியில் மீன்வளத்துறை மூலமாக கெண்டை மீன்களும் திங்கள்கிழமை விடப்படுகிறது என்றார்.