மேஜர் முகுந்த் வரதராஜன் பேஸ்புக்கில் 13 ஆயிரம் பேர் அஞ்சலி

மேஜர் முகுந்த் வரதராஜன் பேஸ்புக்கில் 13 ஆயிரம் பேர் அஞ்சலி
Updated on
1 min read

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடந்த 25-ம் தேதி சென்னையை சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் மரண மடைந்தார். அவரது உடல் கடந்த 28-ம் தேதி முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

அவருக்கு நண்பர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேஜர் முகுந்த் வரதராஜன் மரணம் அடைந்த அடுத்த நாளான 26-ம் தேதி, பேஸ்புக்கில் அவருடைய பெயரில் தனியாக ஒரு பக்கம் தொடங்கப்பட்டது. இந்த பக்கத்தில், காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான தாக்குத லில் மேஜர் முகுந்த் வரதராஜன் பலியானது முதல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது வரையில் பத்திரிகைகளில் வெளி யான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வது, குடும்பத்தினர் சோகத்துடன் அமர்ந்து இருப்பது, மேஜர் உடலுக்கு ராணுவ மரியாதை செய்வது மற்றும் அவரது ராணுவ உடைகள், மனைவியிடம் ஒப்படைக்கப்படுவது போன்ற பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேஜர் முகுந்த் வரதராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாத அவரின் நண்பர்கள், உறவினர் கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் அவரு டைய பேஸ்புக் பக்கத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின் றனர்.

மேஜர் முகுந்த் வரதராஜன் பேஸ்புக் பக்கத்தை காண்பதற் கான லிங்க்…

https://www.facebook.com/majormukundvaradarajan.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in