

ரஜினிகாந்த் மீது அவதூறு கற்பிக் கும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் செய லுக்கு இந்து மக்கள் கட்சித் தலை வர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ரஜினிகாந்தின் அரசி யல் பிரவேசத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி தாராளமாக எதிர்ப்பு தெரி விக்கலாம். ஆனால் அவர் நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், படிப்பறிவு இல்லாதவர் என்றும் கூறுவது சரியல்ல. அரசியல் பிரவேசம் எனும்போது இதுபோன்ற புகார்களைக் கூறுவது மிரட்டல் அரசியலாகவே பார்க்க முடிகிறது.
மக்களுக்கு நன்மை செய்யவும், அரசியலுக்கு வருவதற்கும் கல்வி ஒரு தகுதி அல்ல. தெய்வபக்தி, தேசபக்தி, அர்ப்பணிப்பு, தியாகம்தான் அதற்கு முக்கியம். ரஜினிகாந்திடம் இந்த பண்புகள் உள்ளன. ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார்.