அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு: கோவை - பெங்களூரு இடையே விரைவு ரயில் - சென்னை விழாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு

அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு: கோவை - பெங்களூரு இடையே விரைவு ரயில் - சென்னை விழாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
Updated on
2 min read

தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் 10 முக்கிய திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார். ரயில்வே துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். தொழில் நகரங்களான கோயம்புத்தூர் பெங் களூரு இடையே புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய திட்டங்கள், புதிய சேவைகள் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோக்ரி வரவேற்புரை ஆற்றினார். 10 திட்டங் களையும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். அவர் பேசியதாவது:

இந்த ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறை சார்பில் ரூ.55 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும். எஞ்சிய தொகையை பிற நிதி ஆதாரங்கள் மூலம் பெற திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு சராசரி யாக தலா ரூ.800 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. தற்போதைய மத்திய அரசு தமிழகத்துக்கு 2016-17ல் ரூ.1,560 கோடி, 2017-18ல் ரூ.2,287 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளைவிட 160 சதவீதம் அதிகம். அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

எல்எச்பி போன்ற புதுமையான தொழில்நுட்ப வசதியுள்ள பெட்டி கள், ரயில்களில் இணைக்கப்படு கின்றன. தற்போதுள்ள 44 ஆயிரம் பெட்டிகள் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மாற்றப்படும். இதன்மூலம் மக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்ய முடியும். சென்னை சென்ட்ரல் உட்பட மொத்தம் 400 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்படும்.

பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் மூலமாகவே ரயில்வேக்கு வருமானம் கிடைக்கிறது. முதல் முறையாக கட்டண உயர்வின்றி வருமானத்தை அதிகரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனி இயக்குநரகம் அமைக்கப்பட்டது, அதன் கீழ் முக் கிய ரயில் நிலையங்களில் இயக்கு நர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.17 ஆயிரம் கோடி வருவாய் பெற முடியும். 2019-ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு இடங்களில் ரயில் சேவை அதிகரிக்கப்படும்.

விரைவில் புதிய செயலி

ரயில் டிக்கெட் முன்பதிவு, ரத்து உள்ளிட்ட வசதிகளை ஒருங் கிணைந்து பெறும் வகையில் புதிய செயலி விரைவில் தொடங் கப்படும். கோயம்புத்தூர் பெங்க ளூரு ஆகிய தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப் படும். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தொழில்நுட்பம் மூலம் நம் நாட்டில் அதிவேக விரைவு ரயில்கள் தயாரித்து இயக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.

10 புதிய திட்டங்கள் என்னென்ன?

சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் பேசின் பிரிட்ஜ் இடையே 5, 6 புதிய பாதை, நெமிலிச்சேரியில் புதிய சுரங்கப்பாதை, எழும்பூர், மதுரையில் வைஃபை வசதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் 2-வது நுழைவாயில் புதிய சுற்றோட்ட பகுதி மற்றும் வைஃபை வசதி, மாம்பலத்தில் இருவழி நடைமேடை, கோடம்பாக்கத்தில் பயணச்சீட்டு அலுவலகம், திருநின்றவூரில் நடை மேம்பாலம், பயணச்சீட்டு அலுவலகம், சிலம்பு விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு, செங்கோட்டை ஆரியங்காவு புதிய அகலப்பாதை ஆகிய 10 திட்டங் களும் தெற்கு ரயில்வே சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in