

மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் பிரிவு 6 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டப் பிரிவு 4 ஆகிய வற்றை திருத்தியமைத்து அதை சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சரும், சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் தலைவருமான அருண் ஜெட்லி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழக நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:
தமிழ்நாடு துணை நிற்கும்
மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நிதி சுயாட்சியைக் காப்பாற்ற, தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும். மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் பிரிவு 6 மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டப் பிரிவு 4 ஆகிய இரண்டும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களின் அதிகாரப் பகிர்வு குறித்தவை ஆகும். சரக்கு மற்றும் சேவை வரிச்சட்ட கவுன்சில் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள தீர் மானங்கள் அடிப்படையில் ஒரு விகிதாச்சார அடிப்படையில், வணிகர்களை மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கிடையே பிரித்து, மூன்று சட்டங்களின் கீழ் சமமான அதிகாரப் பகிர்வு ஏற்படுத்த வேண்டும்.
இச்சம அதிகாரப் பகிர்வினை அறிவிக்கை வடிவில் ஏற்படுத்து வதற்குப் பதிலாக சட்டவடிவில் கொண்டு வர வேண்டும். உதா ரணமாக ஏற்கெனவே மாநிலங் களால் நிர்வகிக்கப்படும் மத்திய விற்பனை வரிச்சட்டப் பிரிவின் படி வரிவிதிப்பு, மறு வரிவிதிப்பு, வசூல், வரி செலுத்துதல், வட்டி மற்றும் தண்டத்தொகை வசூல் போன்ற அனைத்து நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்வதற்கு மாநில அரசு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இச்சட்டம் மாநிலங் களால் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனித் தனியாக தெரிவித்துள்ள கருத்துரு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அப்படியே அமல்படுத்த வேண்டும். அதனை மறுதிருத்தம் செய்வதாக இருந்தால் அது சட் டத்துக்குட்பட்டு அதிகாரங்களை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழகம் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும். நாடாளு மன்றத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம், வருவாய் இழப்பு ஈடுசெய்யும் சட்டம் ஆகி யவை நிறைவேற்றப்பட்டவுடன், தமிழக சட்டப்பேரவையில் மாநில சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் பேசினார்.