Published : 22 Aug 2016 11:51 AM
Last Updated : 22 Aug 2016 11:51 AM

திமுக வழக்கில் சபாநாயகர், பேரவை செயலருக்கு நோட்டீஸ்; எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் 79 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கில், இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர், செய லாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 17-ம் தேதி அதிமுக உறுப் பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரி வித்து திமுக உறுப்பினர்கள் அமளி யில் ஈடுபட்டனர். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் உட்பட திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், ஸ்டாலின் உள்ளிட்ட 79 எம்எல்ஏக் களை இடைநீக்கம் செய்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

பேரவைத் தலைவரின் இந்த உத்தரவை எதிர்த்து மு.க.ஸ்டாலின், மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பிடிஆர்.தியாகராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோர் முன்பு நேற்று நடந்தது. மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரனும், தியாகராஜன் தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அரசு தரப்பில் எம்.கே.சுப்ரமணியனும் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நடந்த வாதம் வருமாறு:

நீதிபதிகள்: ஒரே பிரச்சினைக்கு இத்தனை மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்களே, இதில் எந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது?

மோகன் பராசரன்: தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே எப்போதும் இல்லாத வகையில் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 79 திமுக எம்எல்ஏக்களை இடை நீ்க்கம் செய்துள்ளனர். இதில் உள் நோக்கம் உள்ளது. முதலில் வெளி யேற்றிவிட்டு பின்னர் அவர்களை பேரவைத் தலைவர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இடை நீக்கம் செய்துள்ளார். இது சட்டவிரோதமானது. ஏற்கெனவே 5 நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் 2 நாட்கள்தான் பாக்கி உள்ளது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து இடைக்காலமாக உத்தரவு பிறப்பிக்க வேண்டி தனித்தனியாக 4 மனுக்களை தாக்கல் செய்தோம். அதில் ஏதாவது ஒரு மனு மீது விவாதம் செய்கிறேன்.

நீதிபதிகள்: பேரவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. அவரது அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா, அந்த உத்தரவை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந் துள்ளது.

மோகன் பராசரன்: சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்களையும் சேர்த்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

நீதிபதிகள்: இந்த வழக்கை பொறுத்தமட்டில் இப்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிராக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும்.

மோகன் பராசரன்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் இந்த மனுவே செல்லாது என ஆகிவிடும்.

நீதிபதிகள்: பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லுமா, செல்லாதா? அதில் நீதிமன்றம் தலையிட முடியுமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டி யுள்ளது.

இடைக்கால உத்தரவு பிறப் பிக்க முடியாது என்பதற்காக இந்த மனு செல்லாது என ஆகி விடாது. இதுதொடர்பாக பதில ளிக்க பேரவைத் தலைவர், செயலா ளர் மற்றும் தமிழக அரசின் முதன் மைச் செயலாளர் ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தர விடுகிறோம். அவர்கள் தெரிவிக்கும் பதிலின் அடிப்படையில் மேற் கொண்டு விசாரணை நடத்தலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதன்பிறகு மனு மீதான விசார ணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேரவைத் தலைவரின் உத்தரவு இயற்கை நீதிக்கு எதிராக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x