Published : 12 Apr 2014 12:32 PM
Last Updated : 12 Apr 2014 12:32 PM

பட்டாசு கிடங்கு, போர்மென் லைசென்ஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலை பாதிக்கச் செய்யும் மத்திய அரசின் கட்டண உயர்வு அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: இந்தியா வில் விற்பனையாகும் பட்டாசு களில் 80 சதவீதத்தைத் தமிழகம் தான் தருகிறது. லட்சக்கணக்கானோ ருக்கு வேலைவாய்ப்புகளை இந்தத் துறை வழங்குகிறது. மத்திய அரசின் சில அறிவிப்புகளை எதிர்த்து கடந்த 9-ம் தேதி முதல் பட்டாசு துறையினர் காலவரை யற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர்.

சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு வருவதைத் தடுக்க மத்திய அரசு தவறியதால் ஏற்கெனவே இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள விலை குறைந்த மூலப் பொருளான குளோரைட்டை பயன்படுத்தி, சீன பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பாதிப்பது மட்டுமின்றி, கடுமையான பாதுகாப்பு பிரச்சினைகளையும் சுற்றுப்புற கேடுகளையும் அவை ஏற்படுத்துகின்றன.

சீன பட்டாசுகளின் தீமைகள் பற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 17-ல் எல்லா மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தற்போது பட்டாசு களை ஏற்றுமதி செய்யவும் இறக்கு மதி செய்யவும் தேவையான அனுமதிகளைப் பெறுவதற்காக பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள்களுக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் நாக்பூர் அலுவலகத்தில் புதிய பதவி உருவாக்கப்பட்டு இருப்பதும், ஏழாம் வகை வெடி பொருள்களான பட்டாசுகளை இறக்குமதி செய் வதற்கான கட்டணங்கள் பற்றி கடந்த மார்ச் 20-ல் வெளியான அறிவிப்பும் பட்டாசுத் தொழில்துறையினர் இடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

2 லட்சம் கிலோ எடையுள்ள பட்டாசுகளைக் கிடங்கில் வைத்துப் பாதுகாக்க ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமாக இருந்த கட்டணம், தற்போது ரூ. 4 லட்சமாக மாற்றப் பட்டுள்ளது. இது 27 மடங்கு உயர்வாகும். போர்மென் லைசன்ஸ் கட்டணமும் ரூ.100லி ருந்து ரூ.3000 ஆக உயர்த் தப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில் இதுபோன்ற கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது தேர்தல் விதிகளை மீறியதாகும்.

எனவே, கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்யுமாறு கோருகிறேன். சீனாவில் இருந்து பட்டாசுகள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க மத்திய அரசின் சுங்க அதிகாரிகள் ஆவன செய்யுமாறும் கோருகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x