

பிரான்ஸ் நாட்டில் மரணமடைந்த கும்பகோணம் இளைஞரின் உடல் 14 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை சொந்த ஊரான திருநறை யூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது சடலத்தைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே உள்ள திருநறை யூர் சிவன் கோயில் சன்னதி தெருவைத் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மகன் மணி மாறன்(27) பி.இ. படித்துவிட்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டுக்கு எம்.எஸ் (மாஸ்டர் ஆப் சயின்ஸ்) படிக்கச் சென்றார். சில மாதங்களுக்கு முன்னரே படிப்பு முடிந்துவிட்ட நிலையில், அங்கு உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்று வதற்கு அவருக்கு வேலை நியமன உத்தரவும் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் மர்ம நபர்களால் மணிமாறன் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டி லிருந்து மணிமாறனின் உடல் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தது. தொடர்ந்து, சென்னை யிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை திருநறையூருக்குக் கொண்டுவரப்பட்டது. மணிமாற னின் சடலத்தைப் பார்த்து உற வினர்கள் கதறி அழுதனர். பின் னர், அங்கு உள்ள சுடுகாட்டில் மணிமாறனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.