

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி யில் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிட்டது. எனவே, இந்த இடைத்தேர்தலில் போட்டி யிட இருப்பதாகவும், அதற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண் டும் என்றும் திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் என்னை கேட்டுக் கொண்டார். இதனை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகப் பொறுப் பாளர் முகுல் வாஸ்னிக் ஆகி யோரிடம் தெரிவித்தேன். அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட் பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மமக தலைவர் எம்.எச்.ஜவா ஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘வறட்சி, விவ சாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, மீனவர் படுகொலை உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளில் அதிமுக அரசு உருப்படியான எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. பெட் ரோல், டீசல் மீதான வாட் வரி யையும் அதிமுக அரசு உயர்த்தி யுள்ளது. பால் விலையும் உயர்ந்துள்ளது. எனவே ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவை மமக ஆதரிக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.