ஆகஸ்ட் 30-ல் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும்: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை

ஆகஸ்ட் 30-ல் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும்: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை
Updated on
1 min read

காவிரி நீர் கோரி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ள தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அனைத்து விவசாயி கள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டி யன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது:

காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி தொடர் போராட் டங்கள் தமிழகத்தில் உச்சக்கட் டத்தை எட்டியுள்ளன. இந்நிலை யில், கர்நாடக அணைகளில் தண் ணீர் இல்லை என்று கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முன்னுக்குப்பின் முரணாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனவே, பிரதமர் ஓர் உயர்நிலைக் குழுவை அனுப்பி, கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்து, தண்ணீர் பற்றாக் குறை காலத்தில் பகிர்ந்தளிக்க வேண்டிய வழிமுறைகளைப் பின்பற்றி, காவிரி நீரை தமிழகத் துக்கு பெற்றுத் தர வேண்டும். இதை தமிழக முதல்வர், பிரதம ருக்கு வலியுறுத்த வேண்டும்.

காவிரி மட்டுமின்றி, முல்லை பெரியாறு, பாலாறு உரிமைகளை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி தலை வர்களுடன் டெல்லி சென்று, பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர்கள், தொழிற் சங்கங்கள், விவசாயிகள் பங் கேற்று நடத்த உள்ள முழு அடைப்பு மற்றும் ரயில், சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்க வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத்துக்கும் அன்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்துக்கு, மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி கள் ஆதரவளித்து, பங்கேற்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. அதை பின்பற்றி அதிமுக வும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதுகுறித்து முதல்வ ருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார்.

1,000 இடங்களில் சாலை மறியல்

இந்நிலையில் கர்நாடகத் திடமிருந்து சம்பா சாகுபடிக்காகக் காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி, டெல்டா மாவட்டங் களில் ஆயிரம் இடங்களில் செப்டம்பர் 23-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற இக்குழுவின் கலந்தாய்வுக் கூட்டத் தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன். செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in