

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கத்தை கடத்தி வந்த ஆந்திர மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஸ்ரீராமலு (35) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அவர் தலா 100 கிராம் எடையுள்ள 10 தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங் கத்தை பறிமுதல் செய்த அதிகாரி கள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.