

அரியலூர் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நேற்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 500 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் விழாவை கண்டுகளித்தனர்.
விழாவில், காளைகள் முட்டியதில் கோக்குடி வேளாங்கண்ணி(32), கோவிலூர் காமராஜ்(50) உட்பட 27 பேர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த வேளாங்கண்ணி, காமராஜ் ஆகியோர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வேளாங்கண்ணி உயிரிழந்தார்.