

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மற்றும் குடவரை சிற்பங்கள் போன்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக, கடந்த 2015-ம் ஆண்டில் மொத்தம் 2,66,450 பேர் வந்ததாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவதோடு, யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச சுற்றுலா தலமாகவும் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இதனால், சுற்று லாத் துறை சார்பில் மாமல்லபுரம் பகுதியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டில் மாமல்லபுரம் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு சராசரியாக 230 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 2,66,450 சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வந்ததாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சுற்றுலாத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பணிகளின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது.
எனவே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, ஆங்காங்கே அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள், அலங்கார விளக்குகள் அமைத்து வருகிறோம் என்று அந்த வட்டாரங்கள் கூறின.