

வெப்ப சலனத்தால் தென் கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, தென் கடலோர தமிழக பகுதியில் மேகக் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத் தில் வெப்ப சலனம் காரணமாக தென் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அள வின்படி, புள்ளம்பாடியில் 8 செமீ, பெரம்பலூர், வாழப்பாடியில் தலா 7 செமீ, செட்டிகுளம், திருச்சியில் தலா 5 செமீ, சமயபுரத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.