ஹவுரா, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஹவுரா, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published on

சென்னையில் இருந்து ஹவுரா, திருநெல் வேலிக்கு ஏசி மற்றும் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 19, 26-ம் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ஏசி அதிவிரைவு ரயில் (00842) மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுராவை சென்றடையும்.

கொச்சுவேலியில் இருந்து வரும் 13-ம் தேதி இரவு 8.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (07118) கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி வழியாக 15-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும்.

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 7-ம் தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00603) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், திருநெல்வேலியில் இருந்து வரும் 9-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00604) மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in